
கோலாலம்பூர், ஜூன் 18 – பாடகர் மற்றும் நடிகை அடிபா நோர் புற்றுநோயால் தனது 52வது வயதில் இன்று மாலை காலமானார்.
அவரது மரணத்தை நெருங்கிய நண்பர் ஒருவர் உறுதிபடுத்தியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
மேடை நெறியாளராக அறிமுகமாகி, பின்னர் விளம்பரங்களுக்கு பின்னணி குரல் என 1995ஆம் ஆண்டு திரையுலகிற்கு வந்தவர் அடிபா. அதன் பின்னர் Sepet , Gubra போன்ற புகழ்ப்பெற்ற் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிட்டியது.