Latestசினிமா

நடிகை கீர்த்தி சுரேஷுக்குக் கோவிட் தொற்று

திருவனந்தபுரம், ஜன 12- இந்தியாவில் கோவிட் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், திரையுலகிலுள்ள பல முன்னணி நடிகர் நடிகைகள் அத்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல கோலிவூட் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நேற்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
மிகுந்த கவனமாக இருந்தபோதிலும், லேசான அறிகுறிகளுடன் தனக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதாகவும் விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்குச் செல்வேன் என நம்புவதாகவும் அப்பதிவில் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!