Latestஉலகம்சினிமா

நடிகை தமன்னா திருமணத்திற்கு தயாராகிறாரா ?

சென்னை, நவ 17 – தென்னிந்திய நடிகையான தமன்னா , விரைவில் மும்பை தொழிலதிபரைத் திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகில் கால் பதித்திருக்கும் தமன்னாவிற்கு வயது 30-ஐ தாண்டியிருக்கிறது.

எப்போது இவர் திருமணம் செய்துக் கொள்வார் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள தமன்னா ஒப்புக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் வேளை, அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தமன்னா தரப்பிலிருந்து இதுவரை வெளிவரவில்லை.

எனினும், ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலமாக தமன்னாவிற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!