Latestசினிமா

நடிகை மீனாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கோவிட் தொற்று

சென்னை, ஜன 7 – எல்லோரும் போல் புதிய ஆண்டை நல்ல தொடக்கத்துடனே வரவேற்க விரும்பிய தாம், 2022-இல் புதிய விருந்தாளியை வரவேற்றிருப்பதாகக் கூறியுள்ளார், தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மீனா.

2022-இல் Mr. Corona தங்களது வீட்டிற்கு வந்திருப்பதாகவும்,தமக்கும் தமது குடும்பத்தினர் அனைவருக்கும் கோவிட் தொற்று கண்டிருப்பதாகவும், மீனா தமது சமூக வலைத்தள பதிவின் மூலமாக தெரிவித்துள்ளார்.

அவரது அந்த பதிவை அடுத்து , அவரது ரசிகர்களும் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினரும் விரைந்து குணமடைய வேண்டிக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து தமிழ் மலையாள படங்களில் நடித்து வரும் மீனா , ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ரவுடி பேபி எனும் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!