சென்னை, பிப் 28- தமிழ், தெலுங்கு, இந்தி முதலிய மொழிப்படங்களின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் உலக நாயகன் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசனுக்குக் கோவிட் தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்.
பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாது பின்பற்றியபோதிலும் தமக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும், மீண்டும் படப்பிடிப்புகளுக்குத் திரும்ப ஆர்வமாக காத்திருப்பதாகவும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஸ்ருதி, தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸ்-சுடன் இணைந்து சாலார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.