
சிட்னி , ஏப் 26 – நடுவானில் பறந்த ஆஸ்திரேலிய விமானத்தில் பயணிகளிடையே கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சண்டையில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட நான்கு பயணிகள் கைது செய்யப்பட்டனர். குயின்ஸ்லாந்திலிருந்து வடக்கு ஆஸ்திரேலியாவுக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட அந்த தகராறு தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. பயணி ஒருவரை காலி போட்டலால் மற்றொரு நபரை தாக்குவது போன்ற காட்சியும் அந்த காணொளியில் இடம்பெற்றது. அந்த விமானத்தில் இருந்து பெண் உட்பட சிலர் எழுந்து நிற்பதும் , அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆவேசமாக பேசிக்கொண்டதோடு சண்டையிடும் வீடியோ ஆஸ்திரேலிலிய சமூக ஊடகங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 4 Passengers, Arrested After ,In-Flight Fighting ,That Caused, An Emergency ,Landing, In Australia