
டில்லி, மார்ச் 17 – நடுவானில் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, விமான கட்டுப்பாட்டு அறையில், சுட சுட காப்பியும், பலகாரத்தையும் சாப்பிட்ட , இந்தியா – SpiceJet தனியார் விமான நிறுவனத்தைச் சேர்ந்த இரு விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்பான, புகைப்படம் ஒன்று இவ்வார தொடக்கத்தில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதையடுத்து அந்த சம்பவத்தை தாங்கள் விசாரிக்கத் தொடங்கியிருப்பதாகவும், அவ்விரு விமானிகளையும் தற்போது இடைநீக்கம் செய்திருப்பதாகவும் SpiceJet நிறுவனம் தெரிவித்தது.
இந்திய வான் போக்குவரத்து விதிமுறைகளின் படி, விமானிகள் , விமான கட்டுப்பாட்டு அறையில் , கடும் கட்டுப்பாடுகளுடன் உணவை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால் , தண்ணீர் கொட்டி அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க டீ கப்புகள் மூடியினால் மூடப்பட்டிருக்க வேண்டுமெனும் கடும் நிபந்தனை உள்ளது .