Latestஇந்தியா

நடுவானில் 2 வயது குழந்தையின் மூச்சு நின்றது; போராடி காப்பாற்றினர் 5 மருத்துவர்கள்

பெங்கலூரூ, ஆக 29 – பெங்கலூருவிலிருந்து டெல்லிக்குச் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் திடிரென 2 வயது குழந்தையின் மூச்சு நின்றதைத் தொடர்ந்து , அதே விமானத்தில் பயணித்த 5 மருத்துவர்கள் அவசர சிகிச்சையை அளித்து அக்குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

நடுவானில் அதிசயதக்க வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் விமானத்தில் பயணித்தவர்களை மட்டுமின்றி தற்போது சமூக ஊடகங்களிலும் அம்மருத்துவர்களுக்கு பாராட்டுக்களை குவித்து வருகிறது.

அந்த மருத்துவர்கள் அனைவரும் டெல்லி, All India Institute of Medical Sciences எனும் AIIMS மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெங்களூருவில் ஒரு மருத்துவ மாநாட்டில் கலந்துக் கொண்டு டெல்லிக்கு திரும்பிய போது, விமானத்தில் இச்சம்பவ்வம் நிகழ்ந்திருக்கிறது.

அக்குழந்தை 3 வாரங்களுக்கு முன்பு, இருதய சிகிச்சை மேற்கொண்டுவிட்டு டெல்லி திரும்பிக் கொண்டிருந்த போது திடிரென மூச்சு நின்ற சமவம் நிகழ்ந்தது. அதிர்ஸ்டவசமாக அதே விமானத்தில் 5 மருத்துவ வள்ளுனர்கள் இருந்ததால் அவசர சிகிச்சை வழங்கப்பட்டு அக்குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!