
கோலாலம்பூர், செப்டம்பர் 13 – இரு வாரங்களுக்கு முன், நண்பரின் மைத்துனியை மாறி மாறி கற்பழித்ததாக, இரு சகோதர்கள் உட்பட மூவருக்கு எதிராக இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், 33 வயது நிக் முஹமட் ரஹிமின் மாட் சாயிட், அவனது சகோதரரான 28 வயது நிக் கைரா ஹபிசி, 33 வயது முஹமட் ஜுல்ஹில்மி ஜைனுடின் ஆகிய அம்மூவரும் தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி, பின்னிரவு மணி இரண்டு வாக்கில், வங்கா மாஜுவிலுள்ள, வீடொன்றில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டப்பட்ட மூவரையும் இன்று உத்தரவாததின் பேரில் விடுவிக்க நீதிபதி மறுத்துவிட்டார். இவ்வழக்கு விசாரணை அக்டோபர் 12-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
தனது மைத்துனியைக் கூட்டாக கற்பழிக்க, உடந்தையாக செயல்பட்ட, நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான ஆடவன் ஒருவனுக்கு எதிராக, கடந்த வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், 29 வயதான அந்த வேலையில்லா ஆடவனும், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியது குறிப்பிடத்தக்கது.