
ஈப்போ, ஆக 28 – தனது நண்பரை கொலை செய்தபின் உடலை கால்வாயில் வீசியதாக நம்பப்படும் இளைஞன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். Bagan Datuk Kampung Sungai payung Baruh வில் Jalan Pasir ரிலுள்ள கால்வாயில் 21 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. தெலுக் இந்தானிலுள்ள வீடமைப்பு பகுதியைச் சேர்ந்த கொல்லப்பட்ட ட இளைஞரும் கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வயும் நண்பர்கள் என்பதோடு அவ்விருவரும் அண்டை வீட்டுக்காரர்களாவர் என ஹிலிர் பேரா மாவாட்ட போலீஸ் தலைவர் ACP அட்னான் பஸ்ரி வெளிட்ட அறிக்கையில் தெரிவித்தார். தமது காதலியை தொந்தரவு செய்ததைத் தொடர்ந்து அந்த இளைஞனை சந்தேகப் பேர்வழி தாக்கியதாக நம்பப்படுகிறது.