
ஜோகூர் பாரு , ஜன 12 –தனது துப்பாக்கியை நண்பரிடம் கொடுத்து அதைப் பிடிக்க அனுமதித்ததை அடுத்து, பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ஒருவர்.
நண்பர் போலீஸ் துப்பாக்கிப் பிடித்துக் கொண்டிருக்க, சிகரெட் புகைத்துக் கொண்டு, அந்த போலீஸ் அதிகாரி, போலீஸ் நிலையத்துக்கு முன் நின்றுக் கொண்டு எடுத்து கொண்ட புகைப்படம் டிவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஜோகூரில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு முன் நின்றுக் கொண்டு அவ்விருவரும் அதை புகைப்படமாகவும் எடுத்துக் கொண்டது தற்போது பெரும் சர்ச்சையாகின்றது.
ஒரு நினைவாகவே , அந்த புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், சமூக வலைத்தளத்தில் அதைப் பகிர்ந்ததால் தற்போது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி , கட்டொழுங்கு விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.
பொது மக்களின் ஒருவர் போலிஸ் துப்பாக்கியைப் பிடிக்க அனுமதித்திருப்பதின் வாயிலாக , சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி கட்டொழுங்கு விதிமுறைகளை மீறியிருப்பதாக , Seri Alam மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.