Latestமலேசியா

தீபகற்பத்தைக் ‘கவ்வும்’ வெப்ப அலை : அணைக்கட்டுகளின் நீர் மட்டமும் குறைகிறது

கோலாலம்பூர், மார்ச் 17 – அதிக வெப்பம் மற்றும் வறட்சியால் நாடு பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் ஏராளமான பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களுக்கு அவ்வெச்சரிக்கை அதிகமாகியுள்ளது.

அங்கு, அணைக்கட்டுகளின் நீர் மட்டமும் அபாய அளவை நெருங்கி வருகிறது.

குறிப்பாக கெடா, போக்கோக் செனா, இரண்டாவது முறையாக வெப்ப அலையின் இரண்டாம் கட்ட எச்சரிக்கையைப் பெற்றுள்ளது.

அப்பட்டணத்திற்கு ஏற்கனவே பிப்ரவரி 28-ஆம் தேதி அவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

போக்கோக் செனா தவிர்த்து, பாடாங் தெராப், சீக், பாலிங், குவாலா மூடா, பெண்டாங், கோத்தா ஸ்டார் ஆகிய இடங்களுக்கு முதல் கட்ட வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமை ஒட்டுமொத்த பெர்லிஸ் மாநிலத்திற்கும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை அது முதல் கட்ட எச்சரிக்கையாகக் குறைக்கப்பட்டது.

நேற்று மாலை வரைக்குமான தகவலின் படி, கோலாலம்பூர், பேராக், பஹாங் மற்றும் சிலாங்கூரின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடப்பட்டது.

இதனிடையே, பெர்லிசில் பல பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக மழையே இல்லை என்றும், அப்படியே அதிசயமாக பெய்தாலும், அதிகபட்சம் 10 நிமிடங்களைக் கூட தாண்டுவதில்லை என்றும் அம்மாநில மக்களில் சிலர் The Star-ரிடம் கூறினர்.

தொடர்ந்தாற்போல் மூன்று நாட்களுக்கு 37-40 செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையைப் பதிவுச் செய்யும் பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெப்ப அலை எச்சரிக்கை விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!