
கோலாலம்பூர் , ஜன 24 – தொண்டோ நன்கொடையோ ! ஊழல் ஊழலே ! சொந்த புரிதலில் ஒருவர் தங்களது செயலை நியாயப்படுத்த எதையும் கூறலாம்.
ஆனால், எந்த வடிவில் ஊழல் புரியப்பட்டிருந்தாலும், அதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கட்டாயம் விசாரிக்குமென , அவ்வாணையத் தலைவர் Azam Baki தெரிவித்தார்.
திரெங்கானுவில், 3 நாடாளுமன்ற இடங்களின் தேர்தல் முடிவை, ரத்து செய்யக் கோரி, அம்மாநில அம்னோ மனுவைத் தாக்கல் செய்திருந்தது. வாக்காளர்களுக்கு ரொக்கப் பணம் கொடுக்கப்படும் காணொளிப் பதிவு தங்களிடம் இருப்பதாக அம்னோ கூறியதை அடுத்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தாங்கள் தொண்டு புரிந்திருப்பதாக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருந்தார்.
அதன் தொடர்பில் கருத்துரைத்த Azam Baki, ஒருவர் தங்களது செயலை எவ்வாறு சித்தரித்தாலும், ஊழல் ஊழல் தான் என குறிப்பிட்டார். அதோடு, வாக்குகளை வாங்குவது தொடர்பில் தேர்தல் குற்றச் செயல் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்