
கொழும்பு, ஜூன் 23 – சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் நன்கொடை நாடுகளின் மாநாட்டை ஏற்று நடத்துவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் அந்த மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் Ranil Wickremesinghe நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அந்த மூன்று நாடுகளும் இலங்கையின் வரலாற்றுப்பூர்வமான நட்பை கொண்டிருப்பதால் அவற்றின் உதவியும் ஆதரவும் இப்போதைய நெருக்கடியான நிலையில் அதிகம் தேவைப்படுவதாக Ranil தெரிவித்தார். .