கோலாலம்பூர், நவம்பர்-26, அண்மையில் நடைபெற்ற மாநாட்டொன்றில் சொற்பொழிவாற்றிய போது நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தியதாகக் கூறப்படும் விரிவுரையாளரிடம், புக்கிட் அமான் போலீஸ் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளது.
அவ்விசாரணையின் போது அவரிடம் 23 கேள்விகள் கேட்கப்பட்டதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் ( Tan Sri Razaruddin Husain) தெரிவித்தார்.
ஓரே மதத்தவரிடையே நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்யும் செயல் எனக் கருதி, குற்றவியல் சட்டத்தின் 298A பிரிவின் கீழ் அவ்விரிவுரையாளர் விசாரிக்கப்படுகிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டாண்டுகளுக்கும் குறையாமல் ஐந்தாண்டுகளுக்கும் மேற்போகாமல் சிறைத் தண்டனை விதிக்க, அச்சட்ட பிரிவு வகை செய்கிறது.
1998-ஆம் ஆண்டு தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் கீழும் அவர் விசாரிக்கப்படுகிறார்.
நேற்று நண்பகல் வரை அவருக்கெதிராக 9 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன.