
கோலாலம்பூர், நவ 9 – நம்பிக்கை மோசடிக்கு உடந்தையாக இருந்தது, சொத்துக்களை தவறாக பயன்படுத்தியது மற்றும் பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு சம்பந்தப்பட்ட சொத்து மற்றும் சட்டவிரோத பண பறிமாற்றம் ஆகிய குற்றங்களை மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சாயிட் அப்துல் ரஹ்மான் புரிந்துள்ளார் என்பதால் அவர் குற்றவாளி என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூடா கட்சியின் தலைவருமான சைட் சாடிகிற்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்திருப்பதாக நீதிபதி ஹக்கீம் அசார் அப்துல் ஹமீத் தமது தீர்ப்பில் தெரிவித்தார். பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக இருந்தபோது அவர் இந்த குற்றங்களை புரிந்துள்ளார் என்பது விசாரணையில் நிருபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஹக்கீம் அசார் தெரிவித்தார். தண்டனை விதிப்பதற்கு முன் சைட் சாடிக் மற்றும் அரசுத் தரப்பின் முறையீட்டை கேட்கவிருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.