Latestமலேசியா

நம்பிய நண்பனே நட்டாற்றில் விட்டான்; சுற்றுலா சென்ற ஆடவர் மியன்மாருக்குக் கடத்தப்பட்ட சோகம்

செப்பாங், ஜூலை-12 – நம்மில் யாராவது மர்ம நபர்களால் கடத்தப்பட்டால் நிச்சயம் மரண பீதியில் உறைந்துப் போவோம்.
அதுவே உற்றத் தோழனே அக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தால், அந்த அதிர்ச்சியை எத்தனைப் பேரால் ஜீரணிக்க முடியும்?

கனவிலும் நினைத்திராத அத்தகைய பயங்கர அனுபவத்தைச் சந்தித்துள்ளார் 37 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர்.
பத்தாண்டுகளாக பழகிய நண்பர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏப்ரல் மாத இறுதியில் திடீரென தம்மைத் தொடர்புக் கொண்டு பேங்காக் போய் வரலாம் என்றார்.

சமய நிகழ்வொன்றில் பங்கேற்பதோடு சுற்றிப் பார்த்து வரலாமென்றும் கூறிய நண்பர், அதற்கான மொத்தச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகக் கூறியதால், Law எனும் அவ்வாடவர் உடனே ஒப்புக் கொண்டு மே 7-ஆம் தாய்லாந்துப் பயணமானார்.

பேங்கோக் சென்று சேர்ந்ததும் காரில் செல்லும் போது நண்பர் எனக்கு குடிக்க பானம் கொடுத்தார்; குடித்த வேகத்தில் நான் மயக்கமானேன்.

விழித்துப் பார்த்தால் மியன்மார் நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியானேன் என Law கூறினார்.

அங்குள்ள வீட்டொன்றில் சீன பிரஜைகள் நால்வரும் ஒரு மலேசிய ஆடவரும் Law-வைக் கட்டிப்போட்டு கட்டையாலும் இரும்பாலும் அடித்ததோடு, கழுத்திலும் கையிலும் கத்தியால் கீறியிருக்கிறனர்.

மலேசியாவில் உள்ள தனது மனைவியைத் தொடர்புக் கொண்டு 50,000 ரிங்கிட் பிணைப் பணமும் கேட்க அவர்கள் வற்புறுத்தினர்.

நல்லவேளையாக அங்கு மலாய் மொழி பேசத் தெரிந்த ஒரு மியன்மார் இராணுவ வீரர் இருந்தார்; அவரின் உதவியால், மலேசிய மனிதநேய அமைப்பின் (MHO) துணையுடன் தப்பி வந்தேன் என, KLIA வந்திறங்கிய போது செய்தியாளர்களிடம் Law சொன்னார்.

தாய்லாந்துக்குக் கூட்டிச் சென்று நட்டாற்றில் விட்ட அந்த ‘உற்றத் தோழனை’ தேடினேன்; ஆனால் அவரின் கைப்பேசி இணைப்பில் இல்லையென மனவலியோடு Law சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!