புத்ராஜெயா, டிசம்பர்-21,இந்திய நாட்டவர்களுக்கான விசா விலக்குச் சலுகையை, அரசாங்கம் 2026 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அவாங் அலிக் ஜெமான் (Datuk Awang Alik Jeman) அறிக்கை வாயிலாக அதனை அறிவித்தார்.
மலேசியா, 2025 ஆசியான் உச்ச நிலை மாநாட்டை ஏற்று நடத்தவிருப்பது மற்றும் 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டின் பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு, அச்சலுகை நீட்டிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
சீன சுற்றுப்பயணிகளுக்கான விசா விலக்கும் அதே காலக்கட்டத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
இந்த விசா தாராளமயமாக்கல் கொள்கையானது, தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வராத வகையில் நாட்டின் பொருளாதாரத்தையும் சுற்றுலாத் துறையையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட அச்சலுகையின் வாயிலாக, இந்தியச் சீன சுற்றுப்பயணிகளுக்கு 30 நாள் விசா விலக்கு அளிக்கப்படுகிறது.