
கோலாலம்பூர், மார்ச் 21 – ‘ Jom Ziarah Gereja’ திட்டம் தொடர்பில் , போலிசிடம் வாக்குமூலம் அளிக்க வந்திருந்த இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ ( Hannah Yeoh ) , நாட்டில் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அரசியல் தாக்குதலுக்கு ஒரு வரம்பு வேண்டும். நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும்போது, அவ்விவகாரத்தில் ஒருவர் எல்லை மீறி நடக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், ‘ Jom Ziarah Gereja’ திட்டம் தொடர்பான விசாரணையை போலீசார் விரைந்து முடிக்க, தாம் முழு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக , அமைச்சர் கூறினார்.
ஹன்னா யோ-வின் தவறை மூடி மறைக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக, Chegubard என அறியப்படும் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த Badrul Hisham Shaharin குற்றம் சாட்டியிருந்தார்.
அதன் தொடர்பில் ஹன்னா யோ போலீசில் புகார் செய்திருந்த வேளை , Chegubard பதிலுக்கு ஹன்னா யோ மீது போலிசில் புகார் கொடுத்திருந்தார்.