
கோலாலம்பூர், ஏப் 24 – நள்ளிரவுக்குப் பிறகு பட்டாசுகளை கொழுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிலங்கூர் போலீஸ் தலைவர் Hussein Omar Khan எச்சரித்துள்ளார். கோம்பாக்கில் பட்டாசுகளுடன் விளையாடியபோது சிலர் காயம் அடைந்தது மற்றும் சாலையில் சில தனிப்பட்ட நபர்கள் பட்டாசுகளை கொழுத்திப் போட்டது போன்ற சம்பவங்கள் குறித்து புகார்கள் பெறப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Hussein தெரிவித்தார். திறந்த வெளியில் மட்டமே பட்டாசுகளுடன் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதே தவிர குடியிருப்பு பகுதிகளில் அல்ல. அதோடு நள்ளிரவுக்குப் பிறகு பட்டாசுகளை கொழுத்துவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே இது தொடர்பான புகார்கள் கிடைத்தால் போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்கும் என Hussein தெரிவித்தார்.