
பத்து பஹாட், நவ 10 – நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கதவு திறந்து பார்க்கும்போது வெளியே எவரும் காணப்படுவது கிடையாது. கடந்த சில நாட்களாக ஜொகூர் , பத்து பஹாட் வட்டாரத்திலுள்ள பாரிட் ராஜா மற்றும் அயேர் ஹிதாம் பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் இத்தகைய சூழ்நிலையை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த வாரம் வியாழக்கிழமை மற்றும் நேற்றிரவு கூட இந்த சம்பவத்தினால் பல குடியிருப்புவாசிகள் அதிர்ச்சிக்கும் குழப்பத்திற்கும் உள்ளாகியுள்ளனர். பரித் ஹாஜி சிராஜ் கிராமத்தில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகளும் தங்களது வீடுகளில் அதிகாலை வேளையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். பாரிட் ஹாஜி சாலே, பாரிட் சமியோன், பாரிட் கங்கர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த விசித்திர சம்பவத்தினால் குடியிருப்பு வாசிகள் க்கும் குழப்பத்திற்குள் உள்ளாகியுள்னனர்.