
ஜோர்ஜ் டவுன், அக் 3 – T. நவீனை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து பதின்ம வயதைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் குற்றவாளிகள் அல்ல என பினாங்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பை இன்று காலையில் அறிவித்த நீதிபதி ராட்சி ஹமீட், அந்த ஐவரையும் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து அவர்களை விடுதலை செய்தார். 30 வயதுடைய ஸ். கோபிநாதன், 22 வயதுடைய ஜே. ராஜேசுதான், 22 வயதுடைய ஸ். கோகுலன் மற்றும் வயதுக்குறைந்த இருவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம்தேதி ஜலான் பூங்கா ராய விலுள்ள பூங்காவில் இரவு 11 மணிக்கும் நள்ளிரவுக்குமிடையே அப்போது 18 வயதுடைய நவீனை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
மேலும் நவீனின் நண்பரான 19 வயதுடைய த். ப்ரேவின் என்வருக்கும் காயம் விளைவித்தாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தாக்கப்பட்ட நவீன் மூளை செயல் இழந்ததால் சில நாட்களுக்குப் பின் இறந்தார். அந்த சம்பவம் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு மே 3 ஆம்தேதி வழக்கு விசாரணை தொடங்கியது.