புத்ராஜெயா, ஏப்ரல் 5 – நவீன் கொலையில் ஐந்து பேரை விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டைத் தொடரலாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், சட்டத்துறை அலுவலகம் (AGC) மேல்முறையீட்டுப் பதிவுக்காகக் காத்திருக்கிறது என்று அருண் துரைசாமி கூறினார்.
பினாங்கு உயர் நீதிமன்றத்திடமிருந்து AGC பதிவைப் பெற்றவுடன், ஒரு முடிவெடுப்பதற்கு 10 முதல் 12 நாட்கள் ஆகும் என்றும் அந்தப் பதிவைப் பெற்ற பிறகுதான், தொடரலாமா வேண்டாமா என்பதை மதிப்பிடுவார்கள் என்று அதுகுறித்து அருண் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி, ஐவரின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீட்டு நோட்டீசை தாக்கல் செய்திருந்ததை AGC உறுதிப்படுத்தியது.
குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் அந்த ஐவர் உட்படச் சிறார்களாக இருந்த இருவர், அதே மாதத் தொடக்கத்தில் ஜார்ஜ் டவுனில் உள்ள உயர் நீதிமன்றத்தால் நவீனின் கொலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு நோட்டீஸ் ஐவருக்கும் அவர்களது வழக்கறிஞர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்தார்.
இருப்பினும், ஏஜிசியின் நடவடிக்கைகள் குறித்து அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நவீனின் தாயார் நீண்ட காலமாகக் காத்திருந்தும், எந்த பதிலும் இன்னமும் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியவர், AGC-யின் பதில் தாமதிக்காமல் இருந்திருந்தால் இன்றைய கூட்டம் அவசியமாக இருந்திருக்காது என்று ராஜேஷ் கூறினார்.