Latestமலேசியா

நவீன வசதிகளுடன் பல்நோக்கு மருத்துவமனையாக மாஹ்சா ஸ்பெஷாலிஸ் மருத்துவமனை; விரைவில் திறப்பு விழா

பண்டார் செள்ஜானா புத்ரா, மே 8 – நாட்டின் முன்னணி தனியார் பல்கலைக் கழகங்களில் ஒன்றான மாஹ்சா பல்கலைக்கழகம் மற்றும் Avenue தனியார் கிளினிக்கின் தலைமை நிர்வகமான மாஹ்சா குழுமமும் இணைந்து தனியார் மருத்துவமனையை இன்று அறிமுகம் செய்தது.

கோல லங்காட் மாவட்டத்தில் பண்டார் செளஜானா புத்ராவில் அனைத்து சிகிச்சைகளையும் வழங்கும் முதல் மருத்துவமனையாக செயல்படவுள்ள இந்த மஹ்சா ஸ்பெஷாலிஸ் மருத்துவமனை, பல நவீன வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

ஸ்மார்ட் என்னும் சொல்லுக்கு இலக்கணமாக, நோயாளிகளின் பதிவுகள் தொடங்கி அனைத்தும் இணையம் மற்றும் செயலிகள் வாயிலாக நடைபெறும் என மாஹ்சா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஹனிஃபா அப்துல்லாஹ் விவரித்தார்.

இம்மருத்துவமனை 4 ஏக்கர் நிலத்தில் 6 மாடிகளுடன், 250 மருத்துவப் படுக்கைகள் மற்றும் அறுவைச்சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

சமுதாயத்திற்காக கட்டப்பட்ட இம்மருத்துவமனையின் அடிப்படை நோக்கமே, தரமான சேவைகளை வழங்கி மக்களுக்குச் சிகிச்சை வழங்குவதே என அதன் தலைமை செயல்முறை இயக்குநர் டாக்டர் அனிதா தெரிவித்தார்.

அனைத்து மருத்துவச் சேவைகளுடன் வாரத்தில் 7 நாட்களுக்கும், 24 மணி நேரமும் இம்மருத்துவமனை செயல்படவுள்ளது.

இதனிடையே, அனைவரும் அணுகக்கூடிய வகையில் நியாயமான கட்டணத்தில், தரமான சிகிச்சை அளிக்கப்படவுள்ள இம்மருத்துவமனை விரைவில் திறப்பு விழா காணும் என டாக்டர் ஹனிஃபா அப்துல்லாஹ் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!