திருவனந்தபுரம், பிப் 3 – நாகப் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது திடீரென அந்த பாம்பு தொடையில் தீண்டியதால் கேராளவின் பிரபல பாம்பு பிடிப்பாளர் வாவா சுரேஸ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் விஷ முறிவு மருந்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதோடு இப்போது அவரால் சுயமாக சுவாசிக்க முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கேரளாவில் கொட்டயத்தில் ஒரு வீட்டிற்கு முன் நாகப் பாம்பு தென்பட்டதை தொடர்ந்து அதனை பிடிக்க முயன்றபோது நடந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பரபரப்பானது. ஏற்கனவே 300 முறை பல்வேறு பாம்புகள் அவரை தீண்டியபோதிலும் இம்முறை அவர் கடுமையான பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்.
Related Articles
Check Also
Close