Latestமலேசியா

பேரங்காடியில் வெளிநாட்டினர் குழந்தையை கடத்த முயன்ற தகவலை சிலாங்கூர் போலீஸ் தலைவர் மறுத்தார்

கோலாலம்பூர், மார்ச் 30 – செவ்வாய்க்கிழமையன்று கிள்ளானில் உள்ள பேரங்காடியில் நேப்பாளத்தை சேர்ந்த இரண்டு ஆடவர்கள் ஒரு குழந்தையை கடத்த முயன்றதாக சமூக வலைத்தளத்தில் வைரலான தகவலை சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் மறுத்திருக்கிறார்.

உண்மையில் தவறான புரிந்துணர்வின் காரணமாக இப்படியொரு தகவல் வெளியானதாகவும் அந்த இரண்டு வெளிநாட்டவர்களும் அந்த பேரங்காடிக்கு அருகே வேலை செய்து வந்தனர் என்பதோடு அவர்கள் பொருட்கள் வாங்க வந்தபோது பழுதடைந்த மின் படிக்கட்டில் குழந்தை ஏற முயன்றதை தடுத்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தவறான புரிந்துணர்வினால் அக்குழந்தை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானதாக ஹுசைன் உமர் கான் தெரிவித்தார். அந்த பேரங்காடியில் கைது செய்யப்பட்ட நேப்பாளத்தை சேர்ந்த இரண்டு ஆடவர்களும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக அங்கு வந்ததாக அவர் கூறினார்.

அந்த குழந்தையை கடத்தும் முயற்சிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதிலும் அவர்கள் ஈடுபடவில்லை. அவர்கள் தப்பிச்செல்வதற்காக வெளியே கார் காத்திருந்ததாக வெளியான தகவலும் தவறாகும்.

பேரங்காடிக்கு அருகே அவர்கள் தப்பிச் செல்வதற்கு கார் ஒன்று காத்திருக்கவில்லை. மேலும் அந்த குழந்தையின் சட்டையை பிடித்திருந்ததாக கூறப்பட்ட அந்த இருவரும் அங்கிருந்து வெளியேறவில்லை. அவர்கள் இருவரும் அந்த குழந்தையை கடத்த முயற்சிக்கவும் இல்லை. அவர்கள் அங்கிருந்து தப்பியோடவும் இல்லையென ஹுசைன் உமர் கான் கூறினார்.

புகார்தாரரும் அவரது பிள்ளை, அவரது சகோதரி மற்றும் அவரது தாயார் ஆகியோர் அந்த பேரங்காடியின் மேல் மாடிக்கு செல்வதற்காக அங்குள்ள பழுதடைந்த அந்த மின்படிக்கட்டிற்கு சென்றனர். பிறகு அங்கிருந்து வெளியேறி அவர்கள் நடந்தனர்.

அப்போது அந்த குழந்தை மின்படிக்கட்டின் பகுதியில் ஏறமுடியாமல் நின்றுகொண்டிருந்தபோது அந்த வெளிநாட்டினரில் ஒருவர் அந்த குழந்தையை சிறிது தூக்க முயன்றார். அக்குழந்தையின் தாயார் அதனை பார்த்தவுடன் அந்த குழந்தையை அவரிடம் அந்த வெளிநாட்டினர் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த குழந்தையின் தாயார் அந்த வெளிநாட்டினர் தனது பிள்ளையை கடத்த முயன்றதாக தவறாக புரிந்துகொண்டுள்ளார். ஒரு குழந்தையை பேரங்காடியில் கடத்த முயன்றதன் தொடர்பில் இரண்டு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் வெளியான காணோளி இதற்கு முன் ரைவலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!