Latestமலேசியா

நாகேந்திரனின் மரண தண்டனை நிலைநிறுத்தப்படுகிறது

சிங்கப்பூர், டிச 3 – சிங்கப்பூரில், மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு, சட்டரீதியாக முறையான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக, அக்குடியரசின் அதிபர் ஹலிமா யாக்கோப் ( Halimah Yacob) தெரிவித்தார்.

நாகேந்திரனின் தண்டனையைக் குறைக்கும்படி, பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா, கடிதம் எழுதி கேட்டுக் கொண்டதை அடுத்து , Halimah Yacob அந்த பதிலைத் தந்திருக்கிறார்.
அவரது அந்த பதில் அடங்கிய அறிக்கையை, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்டது.

இதற்கு முன்பு, நாட்டின் பிரதமரும் வெளியுறவு அமைச்சரும், நாகேந்திரனுக்கு கருணை காட்டும்படி கோரி கடிதம் எழுதியிருந்தனர். எனினும், நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையின் முடிவை தற்காத்தே, அந்நாட்டின் பிரதமர் Lee Hsien Loong- கும், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் பதில் வழங்கியிருந்தனர் .

பேராக்கைச் சேர்ந்த 33 வயது நாகேந்திரன், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 -ஆம் தேதி, சிங்கப்பூருக்குள் 42. 72 கிலோகிராம் போதைப் பொருளை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!