Latestமலேசியா

நாகேந்திரனின் மரண தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சிங்கப்பூர், மார்ச் 1 – 2009-இல் சிங்கப்பூர் குடியரசுக்குள் போதைப் பொருள் கடத்தியதாக மரண தண்டனை எதிர்நோக்கியிருக்கும் மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மேல் முறையீட்டுக்கான தீர்ப்பை அறிவிப்பதை , அந்நாட்டு மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சிங்கப்பூரின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் நாகேந்திரனின் மேல் முறையீட்டை செவிமடுத்தனர்.

அந்த செவிமடுப்புக்குப் பின்னர் தீர்ப்பை அறிவிப்பதை ஒத்தி வைப்பதாகவும் , விரைவில் திரும்பி வருகிறோம் என தலைமை நீதிபதி அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

பிரபல மனித உரிமை வழக்கறிஞரான எம். ரவிக்குப் பதிலாக தற்போது வழக்கறிஞர் வயலச் நேட்டோ (Violet Netto) நாகேந்திரனை பிரதிநிதித்துள்ளார்.
அறிவுகூர் சோதனையில் 70-கும் குறைவான புள்ளிகளைப் பெற்ற நாகேந்திரனின் சிந்திக்கும் திறன் குறைவு என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்த நிலையில், அவரது தண்டனை கடந்தாண்டு நவம்பரில் நிறைவேற்றப்படவிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!