
சிங்கப்பூர், மே 26 – அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்காக வாதாடிய இரு வழக்கறிஞர்கள், தேசிய சட்டத் துறைக்கு 20,000 டாலரை செலுத்தும்படி, சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அவ்விருவரும் நீதிமன்றத்தில் நியாயமற்ற கோரிக்கைகளை முன் வைத்ததால் , அநாவசியமற்ற செலவை நீதிமன்றம் ஏற்க வேண்டியதாயிற்று. அதை அடுத்து வழக்கறிஞர் எம், ரவி, 20,000 டாலரில் 75 விழுக்காட்டு தொகையையும், மற்றொரு வழக்கறிஞர் Violet Netto 25 விழுக்காடு தொகையையும் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.