கோலாலம்பூர், பிப் 26 – போதைப் பொருள் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட Nagendran K . Dharmalingam , Pausi Jefridin ஆகிய இரு மலேசியர்களின் மேல் முறையீடு மீதான விசாரணையை சிங்கப்பூர் நீதிமன்றம் அடுத்த வாரம் செவிமடுக்கும்.
Pausi யுடன் சிங்கப்பூர் பிரஜைகளான Roslan Bakar மற்றும் Rosman Abdullah ஆகியோரின் மேல் முறையீடு பிப்ரவரி 28 ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
நாகேந்திரனின் மேல் முறையீடு அதற்கு மறுநாள் நடைபெறும் என ஆசிய மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த Dobby Chew தெரிவித்தார்.
அந்த நால்வரின் மேல் முறையீடு மீதான விசாரணையில் நாங்கள் கலந்துகொள்வோம் என அவர் கூறினார்.