கோலாலம்பூர், மே 10 – தங்கள் கோழியின் விலை மிகவும் அதிகமாகவும் மற்றும் KFC போன்ற பிற துரித உணவு மையங்களைவிட சிறந்ததாக இல்லை என்று வாடிக்கையாளர் ஒருவரின் புகாருக்கு பதிலளித்த DFC, DarSa Fried Chicken நிறுவனத்தின் பதில் இனவாதமாக இருப்பதாக வெடித்த சர்ச்சையை தொடர்ந்து, நாங்கள் இனவாதி அல்ல எனக் கூறி மன்னிப்புக் கோரியுள்ளது அந்நிறூவனம்.
அந்த முகநூல் கருத்தில், “Type C” DFCக்கு எதிராக பாதகமான வேலையை செய்கிறது என பதிலளிக்கப்பட்டிருந்து. “Type C” என்பது சீன சமூகத்தை குறிப்பதாக சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில், இதனை மறுத்த அந்நிறுவனம், தங்களின் முகநூல் நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து அவரை வேறு துறைக்கு மாற்றியிருப்பதாகவும், அவருக்கு புகார்களை முறையாக கையாளத் தெரியவில்லை என அதன் தலைமை நிர்வாகி Mohammad Faiz Zuhdi Azahar கூறியுள்ளார். தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.