Latestமலேசியா

நாடாளுமன்றத்திற்கு வர பிரதமர் அஞ்சவில்லை; பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 –  தமது அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு அஞ்சி,  பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின், நாளை திங்கட்கிழமை கூடவிருந்த  நாடாளுமன்ற கூட்டத்தை  ஒத்தி வைத்ததாக கூறப்படுவதை , முன்னாள் பேராக் மந்திரி பெசார்  அஹ்மாட்  ஃபைசால் அசுமு மறுத்தார்.

தமது கட்சியின் தலைவர்  டான் ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு  பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக, பெர்சாத்து கட்சியின்  துணைத் தலைவரான  ஃபைசால் அசுமு  தெரிவித்தார்.

நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது, பெர்சாத்து, பெரிக்காத்தான் நெஷனல்  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ,  மக்களவையில்  கேள்விகளை எதிர்கொள்ள டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தயாராக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், நாடாளுமன்றத்தில் கோவிட் தொற்றின் அச்சுறுத்தல் இருப்பதாக, சுகாதார  தலைமை இயக்குநர் வழங்கிய ஆலோசனையின் படியே, மக்களவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக  ஃபைசால் அசுமு கூறினார்.

இவ்வேளையில், மக்களவை ஒத்தி வைக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, தங்களது கடமையை ஆற்றுவதில்  எதுவும் தடையாக இருக்கப் போவதில்லை என  பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் கூறியுள்ளது.

திங்கட்கிழமை தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு  திரும்புவார்கள்  என அம்மன்றம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!