
கோலாலம்பூர், மார்ச் 8 – பொருளாதார அமைச்சர் Rafizi Ramli பேசியபோது பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து இடைமறித்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது நீங்கள் கோமாளியாக இருக்க விரும்பினால் இதர அமைச்சர்களிடம் வைத்துக்கொள்ளுங்கள். என்னிடம் வேண்டாம் என அவாங்கைப் பார்த்து ரபிசி கூறினார். இதனைத் தொடர்ந்து அவாங் மீண்டும் தமது இருக்கையிலிருந்து எழுந்து ரபிசி பேசுவதை இடைமறித்தார்.
அந்த வார்த்தை அவதூறு ஏற்படுத்துவதாக இருப்பதால் அதனை மீட்டுக்கொள்ளும்படி அவாங் கோரிக்கை விடுத்ததோடு ரபிசி பேசுவதை தொடர்ந்து இடைமறித்தார். இதனை தொடர்ந்து அவாங்கை இரண்டு நாட்களுக்கு அவையிலிருந்து வெளியேற்றுவதாக சபாநாயகர் டத்தோ ஜொஹாரி அப்துல் உத்தரவு பிறப்பித்தார். அதோடு கோமாளி என்று கூறிய வார்த்தையையும் ரபிசி மீட்டுக்கொண்டார்.