
இஸ்கந்தர் புத் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்ட விவகாரம், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள, அரசாங்க நடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அமர்வின் போது விவாதிக்கப்படும் முக்கிய விவகாரங்களில் ஒன்றாக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் திங்கட்கிழமை மக்களவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன், ஞாயிற்றுகிழமை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் 148 பேர், புத்ராஜெயாவில் நடைபெறவுள்ள அந்த அமர்வில் கலந்து கொள்வார்கள் என முதலாவது நிதி துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.
அதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், பிரதமரின் விளக்கத்திற்காக காத்திருங்கள் என அஹ்மட் மஸ்லான் குறிப்பிட்டார்.
மக்களவை கூட்டம் தொடங்குவதற்கு முன், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அது தொடர்பில் விளக்கமளிப்பு நடத்தப்படுவது வழக்கமாகும்.
எனினும், இம்முறை அந்த விளக்கமளிப்பு அமர்வு முறையில் நடத்தப்படுவதோடு, அது சற்று நீலமாக இருக்குமெனவும் கூறப்படுகிறது.