Latestமலேசியா

200,000 லிட்டர் கடத்தல் பீர் பறிமுதல்

பட்டர்வொர்த், பிக் 23 – சீனப் புத்தாண்டுக்கு முன்னதாக 263, 343 ரிங்கிட் மதிப்புடைய 200,000 லிட்டர் கடத்தல் பீர் Port Klang மூலமாக பினாக்கிற்கு கொண்டுவரப்பட்ட முயற்சியை சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்தனர். மலேசியாவில் சட்டப்பூர்வமாக தயாரிக்கப்படும் பீர்களில் 5விழுக்காடு மட்டுமே ஆல்கஹால் தன்மையை கொண்டிருக்கும் . ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பீர்களில் 12 முதல் 16 விழுக்காடு ஆல்கஹால் உள்ளடக்கத்துடன் 500 மில்லி பீர் கலன்களில் இருந்தன. கடத்தப்பட்ட 361,236 கலன்களைக் கொண்ட பீர் ஏழு கொள்கலன்களில் கடத்திச் செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டன.

கொள்கலன்களில் அலுமினிய துகள்கள் நிரப்பப்பட்டிருப்பதாக அறிவித்து அதிகாரிகளை ஏமாற்ற முயன்றனர். கிழக்கு ஆசிய நாட்டிலிருந்து கொள்கலன்கள் வந்ததாக பினாங்கு மாநில சுங்க சுங்கத் துறை இயக்குநர் Roselan Ramli தெரிவித்தார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கப்பல் முகவர் கைது செய்யப்பட்டதாகவும் இதர சந்தேக நபர்களைத் தேடுவதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!