
பாகான் டத்தோ, நவ 5 – நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமது சேவை ஒரு முடிவுக்கு வரப்போவதை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி கோடிகாட்டியுள்ளார்.
1995ஆம் ஆண்டு முதல் தாம் நாடாளுமன்ற உறுப்பினரான இருந்து வருவதாகவும் இந்த சேவை நீண்ட காலமாக இருப்பதால் இதனை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அவர் கூறினார். எனது சேவையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன் பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதி முதலில் மேம்படுத்தப்படுவதை தாம் பார்க்க விரும்புவதாக ஸாஹிட் ஹமிடி கூறினார்.
பேராவில் குறைந்தது கல்வித்துறையில் Bagan Datuk முதல் இடத்தை பெறவேண்டும் . பாகான் டத்தோ சிறந்த அடிப்படை வசதியை கொண்டிருக்க வேண்டும் மற்றும் பாகான் டத்தோவிலுள்ள இந்தியர்கள், சீனர்கள் மற்றும் மலாக்காரர்களிடையே ஏழ்மை நிலை குறைக்கப்படுவதை தாம் காண விரும்புவதாகவும் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
பாகான் டத்தோவில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு பேசினார்.