
கோலாலம்பூர், மார்ச் 29 – நாடாளுமன்ற தொகுதிகளில் 35 விழுக்காடு சபா மற்றும் சரவா கொண்டிருக்கும் பரிந்துரையை அரசாங்கம் ஆரயாவிருப்பதாக பிரதமர்துறையின் சட்ட மற்றும் இயங்கங்களுக்கான சீரமைப்பு அமைச்சர் Azalina Othman Said தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆய்வு முழுமையடைந்ததும் அதனை அமைச்சரவை மதிப்பீடு செய்யும் என அவர் கூறினார் . இந்த விவகாரத்தில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டியிருப்பதால் அந்த உத்தேச ஆய்விற்கு சில காலம் பிடிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சபா மற்றும் சரவாவிற்கு 35 விழுக்காடு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என மலேசிய உடன்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சம் நிறைவேற்றப்படுமா என பெலுரான் தொகுதி பெரிக்காத்தான நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் Ronald Kiandee எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்த பதிலில் Azalina இத்தகவலை வெளியிட்டார்.