
கோலாலபூர், பிப் 4 இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எவ்வித கட்டுப்பாடு இன்றி பத்துமலை திருத்தலம் மட்டுமின்றி . பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயம், ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்ரமணியம் ஆலயம், சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணியம் ஆலயங்களிலும் தைப்பூசம் கொண்டாட்டங்கள் களைகட்டின. நேற்றிரவு ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்ட வெள்ளி ரதம் கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்குப் பிறகு இன்று மாலை மணி ஆறு அளவில் பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது. வெள்ளி ரதம் புறப்பட்டது முதல் பத்துமலை வந்தடையும்வரை வெள்ளி ரதத்துடன் ஆயிரக்கணக்காக பக்தர்கள் உடன் வந்தனர். சிறுவர் , பெண்கள் , பெரியோர் முதல் திரளான ன பக்தர்கள் பால்குடம் ஏந்தி பாதயாத்திரையாக வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வெள்ளி ரதம் ஊர்வலத்தின்போது வழிநெடுலும் பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். பக்தர்களுக்கு வசதியாக வழிநெடுகிலும் உணவு மற்றும் பானங்களும் வழங்கப்பட்டன.