Latestமலேசியா

நாடு முழுவதிலும் மலிவு விலையில் கோல்ப் பேக்கேஜ் அறிமுப்படுத்த நடவடிக்கை – ஹனா இயோ

கோலாலம்பூர், பிப் 22- சாதாரன மனிதர்களும் கோல்ப் விளையாட்டில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தனித்தனியாக, மலிவு விலையில் கோல்ப் விளையாட்டாளர்களுக்கான பேக்கேஜ்களை அறிமுகப்படுத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சர் Hannah Yeoh தெரிவித்திருக்கிறார்.

பொதுவாகவே வசதியானவர்களுக்குத்தான் கோல்ப் விளையாட்டு என்ற தோற்றத்தை மாற்றி B40 எனப்படும் குறைந்த வருமானம் பெறுவோரும் அந்த விளையாட்டில் ஈடுபடச் செய்வதற்கான நடவடிக்கையாக இந்த திட்டம் இருப்பதாக அவர் கூறினார்.

இதன் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள கோல்ப் மைதானங்களை நடத்திவரும் தரப்பினரிடமிருந்து இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு தரவுகளை சேகரிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்று கோலாலம்பூரில் The mines Resort & Golf club பில் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய அமெச்சூர் புரோடுவா கோல்ப் போட்டியை தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசியபோது Hannah Yeoh இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் புரோடுவா தலைவர் டான்ஸ்ரீ Azmat Kamaludin , மலேசிய அமெச்சூர் கோல்ப் சங்கத் தலைவர் டான்ஸ்ரீ Mohd Anwar Mohd Nor , உலக அமெச்சூர் கோல்ப் போட்டிக்கான தலைவர் Isac Saminathan , போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் Lokman Ishak ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே இவ்வாண்டு 4ஆவது முறையாக நடைபெறும் தேசிய அமெச்சூர் கோல்ப் போட்டியில் கூட்டரசு பிரதேசம் உட்பட 14 மாநிலங்கள் பங்கேற்கவிருக்கின்றன.

ஆண்கள் ,பெண்கள் என இரண்டு பிரிவாக நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறுவோர் மலேசியாவை பிரதிநிதித்து இவ்வாண்டு அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3ஆம் தேதிவரை தாய்லாந்து புக்கெட்டில் நடைபெறும் உலக அமெச்சூர் கோல்ப் போட்டியில் கலந்துகொள்வார்கள்.

தேசிய அமெச்சூர் கோல்ப் போட்டி 2024 தொடரில் 1,680 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், பிப்ரவரி 29 ஆம்தேதி The Mines Resort and Golf Club பில் தேசிய அமெச்சூர் கோல்ப் போட்டி தொடங்குகிறது.

இதன் கடைசிக் கட்ட போட்டி ஜோகூரில் உள்ள Forest City Golf Resort ட்டில் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதிவரை நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!