
கோத்தா கினபாலு, நவ 8 – வடகிழக்கு பருவமழைக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை நீடிக்கும் என்பதால் நாட்டில் வெள்ளம் ஏற்படக்கூடிய 6,000த்திற்கும் மேற்பட்ட இடங்களை சிவில் தற்காப்பு படை அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைமையத்தின் நிர்வாக பிரிவின் இயக்குனரான ஃபஸ்லி சர்டி தெரிவித்திருக்கிறார். இதர நிறுவனங்களுடன் சேர்ந்து வெள்ளத்தை எப்படி எதிர்நோக்குவது என்பது குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம் என அவர் கூறினார்.
வெள்ளம் ஏற்படும்போது அதனை அவர்கள் எப்படி எதிர்நோக்குவது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் என ஃபஸ்லி சர்டி தெரிவித்தார். கடந்த காலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே தயாராகவில்லை என்பதால் அவர்கள் கடும் விளைவை சந்தித்தனர். இப்படியொரு சூழ்நிலைக்கு அவர்கள் மீண்டும் எதிர்நோக்குவதை நாங்கள் விரும்பவில்லையென ஃபஸ்லி சர்டி தெரிவித்தார்.