இஸ்கந்தர் புத்ரி, பிப் 19 – நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகளை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குபடி சுகாதார அமைச்சு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எல்லைகளை திறக்கும் விவகாரத்தை அரசாங்கம் மிகவும் கவனத்தோடு பரிசீலிக்க வேண்டியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob கூறினார். கோவிட் தொற்று பரவல் தொடர்பாக மக்களின் கவலை மற்றும் SOP யை அமல்படுத்துவதில் அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் போன்ற அம்சங்களையும் ஆராய வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையின் மூலம் நாட்டிற்கு வருமானம் கிடைக்கும் என்றாலும் மக்களை பாதுகாக்க்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இருப்பதையும் மறந்துவிடக்கூடாது என அவர் சுட்டிக்காட்டினார்