கோத்தா கினபாலு, பிப் 9 – சபா மாநிலத்தின் சுற்றுலா தொழில்துறைக்கு புத்துயிரூட்டுவதற்காக நாட்டின் எல்லைகள் விரைவாக திறக்கப்பட வேண்டும் என அம்மாநில சுற்றுலா, பண்பாடு, மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் Jafry Ariffin அறைகூவல் விடுத்தார். அதே வேளையில் கடுமையான SOP விதிமுறைகளுடன் எல்லைகள் திறக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்டுத்த வேண்டும் என அவர் நினைவுறுத்தினார். சுற்றுலா தொழில்துறையின் மீட்சிக்கு அனைத்துலக சந்தை சபாவுக்கு தேவைப்படுகிறது. மேலும் சுற்றுலா மையங்களை வெளிநாட்டினருக்கு அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என Jafry Ariffin தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close