புத்ராஜெயா, பிப் 22 – நாட்டின் அனைத்துலக எல்லையைத் திறப்பது குறித்து அரசாங்கம் விரைவில் அறிவிக்குமென, தேசிய மீட்சித் திட்ட மன்றத்தின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார். எல்லை திறப்புக்கான SOP – களை முடிவு செய்யும் பணியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.
நாட்டின் எல்லையை நீண்ட காலம் மூடியிருப்பதால், பொருளாதாரத்திற்கு அது பாதிப்பினை ஏற்படுத்தும், எனவே எல்லையை திறப்பதை தொடர்ந்து ஒத்தி வைப்பது ஏற்புடையதாக இல்லையென அவர் கூறினார்.
கோவிட் தொற்றினால் 2020 மார்ச் முதல் நாட்டின் அனைத்துலக எல்லை மூடப்பட்டிருக்கிறது.