Latestமலேசியா

நாட்டின் நிர்வாகத் திறன் மிக்க நிறுவனமாக மூன்றாவது ஆண்டாக விருதை வென்ற LBS Bina குழுமம்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-30 – நாட்டின் பிரபல சொத்துடைமை மேம்பாட்டு நிறுவனமான LBS Bina Group Berhad, தொடர்ந்து மூன்றாவது முறையாக மலேசியாவின் சிறந்த நிர்வாகத் திறனுடைய நிறுவனங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பிரசித்திப் பெற்ற அவ்விருது விழாவை, Deloitte Private நடத்தி வருகிறது.

நிர்வாகத் திறன், நீடித்த வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு உணர்வு போன்ற அம்சங்களில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் நோக்கில் அவ்விருது வழங்கப்படுகிறது.

கோலாலம்பூர், Le Meridien ஹோட்டலில் நடைபெற்ற விருதளிப்பில், Deloitte Malaysia-வின் தலைமை செயலதிகாரி Yee Wing Peng-ங்கிடமிருந்து LBS குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயலதிகாரியுமான டத்தோ வீரார் ஜோய் லிம் ஹோக் குவான் (Datuk Wira Joey Lim Hock Guan) விருதைப் பெற்றுக் கொண்டார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் ஒட்டுமொத்த உழைப்பும், பங்களிப்புமுமே குழுமத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பதாக அவர் சொன்னார்.

30 ஆண்டுகளாக சொத்துடைமைத் துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் LBS குழுமம், மக்களின் திருப்தியை முதன்மை நோக்கமாகக் கொண்டு, தரமான அதே சமயம் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

LBS நிறுவனத்தின் சிறந்த நிர்வாக ஆற்றலும் தரமான தலைமைத்துவமும், இந்த 3 ஆண்டுகளில் பதிவுச் செய்யப்பட்ட வருமான வளர்ச்சியிலேயே தெரிகிறது.

குறிப்பாக முடிவடைந்த 2023 நிதியாண்டில், LBS குழுமம் ஆக அதிகமாக 1.8 பில்லியன் ரிங்கிட் வருவாயைப் பதிவுச் செய்தது.

வரிக்குப் பிந்தைய வருமானமும் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 9.7% அதிகரித்து 141 மில்லியன் ரிங்கிட்டாக பதிவானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!