Latestமலேசியா

நாட்டின் புதிய கல்வித் திட்டம் ; பொதுமக்களின் பரிந்துரைகளை வரவேற்கிறது கல்வி அமைச்சு

புத்ராஜெயா, ஜூன் 24 – 2013 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான, PPPM எனும் மலேசிய கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு பதிலாக, புதிய கல்வி திட்டத்தை வரையும் முயற்சியில் கல்வி அமைச்சு ஈடுபட்டுள்ளது.

முழு சமூக அணுகுமுறை அடிப்படையில், முழுமையான கல்வி திட்டத்தை வரைய, பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளையும், கருத்துகளையும் கல்வி அமைச்சு வரவேற்கிறது.

அந்த பரிந்துரைகள் அல்லது கருத்துகளை முன் வைக்க ஏதுவாக, 2026 முதல் 2036 வரையிலான, மலேசிய கல்வி எதிர்கால பரிந்துரை அகப்பக்கம் ஒன்றை கல்வி அமைச்சு உருவாக்கியுள்ளது.

http://www.moe.gov.my/pelanpendidikan2026/public எனும் அந்த அக்கப்பக்கம் வாயிலாக, நாட்டின் கல்வி எதிர்காலம் குறித்து பொதுமக்கள் கருத்துகளையும், பரிந்துரைகளையும் முன் வைக்கலாம்.

இம்மாதம் 14-ஆம் தேதி தொடங்கி, இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரையில், அந்த அகப்பக்கம் வாயிலாக தங்கள் பரிந்துரைகளையும், கருத்துகளையும் முன் வைக்க பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!