
கோலாலம்பூர் , ஜன 24 – நாட்டின் பொருளாதாரத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை , எப்போதும் இல்லாத அளவிற்கு வெகுவாக குறைந்திருப்பதாக, அனைத்துலக ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கின்றது.
Edelmen எனப்படும் அனைத்துலக தொடர்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 35 விழுக்காட்டு மலேசியர்கள் மட்டுமே, ஐந்தாண்டுகளில் தங்களின் பொருளாதார நிலை மேம்படுமென, தாங்களும் தங்களது குடும்பத்தினரும் நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் முன் வைக்கப்பட்ட அந்த ஆய்வில் , நாட்டின் பொருளாதாரத்தின் மீது மலேசியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை , 2022 -குப் பிறகு 20 விழுக்காடு புள்ளிகள் குறைந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது. அந்த விழுக்காடு இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் வைத்திருக்கும் குறைவான நம்பிக்கையை காட்டியுள்ளது.
இதனிடையே, சீனப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது, நாட்டின் பொருளாதாரத்தையும் , மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவது தமது தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அதிக முக்கியத்துவம கொடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
அதோடு, நாட்டின் எதிர்கால பாதையை சீரமைக்கும் ‘ Malaysia Madani ‘ எனும் புதிய நடவடிக்கை திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.