கோலாலம்பூர், பிப் 14 – 2020 மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி, நாட்டில் இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 6. 7 விழுக்காடாகும்.
பத்தாண்டுகளுக்கு முன்பு, நாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை 7. 3 விழுக்காடாக இருந்தது.
பத்தாண்டுகளில், மொத்த மக்கட் தொகை 3 கோடியே 24 லட்சமாக அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியர்களின் மக்கட் தொகை 0. 6 விழுக்காடு சரிவு கண்டிருக்கிறது.
இவ்வேளையில்,மொத்த மக்கட் தொகையில் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 69. 4 விழுக்காடாக இருக்கும் நிலையில், சீனர்களின் எண்ணிக்கை 24.6 விழுக்காடாகும்.
2020 நாட்டின் மொத்த மக்கட் தொகை அறிக்கையை வெளியிட்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அந்த விபரங்களை வெளியிட்டார்.