
பகாங், செப் 10 – நாட்டின் மிக வய்தான, லோகிமாலா எனும் யானை நேற்றிரவு பகாங், கோலா கண்டாவில் உள்ள தேசிய யானைகள் பாதுகாப்பு மையத்தில் மரணமுற்றது.
அதற்கு வயது 86 ஆகும்.
1974ஆம் ஆண்டு, லோகிமாலாவுடன் சேர்த்து மேலும் 3 யானைகள் இந்தியாவிலிருந்து நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாக தேசிய வனவிலங்கு மையம் கூறியிருக்கிறது.
“அப்போது 37 வயதாக இருந்த பெண் யானையான லோகிமாலாவுடன் சேர்த்து, கணேஸ், லால் பஹடுல் மற்றும் போல் பஹடுல் எனும் 4 யானைகள் நாட்டிகு கொண்டு வரப்பட்டன. இதுவரை 150க்கும் வன யானைகளை, குறிப்பாக சிலாங்கூரில் உள்ள மெர்பாவ் பெர்டானா, திரெங்கானுவில் உள்ள தாசிக் கென்யீரில் யானைகளை காப்பகத்திற்கு கொண்டு வர லோகிமால உதவியிருக்கிறது” என வனவிலங்குத் துறை தனது இன்ஸ்தாகிரம் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
முதுமை மற்றும் கண் பார்வை பிரச்சனையால், கடந்த சில ஆண்டுகளாகவே லோகிமாலா சுணக்கம் பெற்றிருந்தது.
உலகின் மிக வயதான யானையாக 2003ஆம் ஆண்டில் மரணமுற்ற லின் வா எனும் யானை உலக கிண்ண சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது லோகிமாலாவின் வயது அந்த யானையின் சாதனையுடன் ஒப்பிடப்படுகிறது.