Latestமலேசியா

நாட்டில் சமய குண்டர் கும்பல் கலாச்சாரம் மோசமாகிவிட்டது – நடனக் கலைஞர் ரம்லி இப்ராஹிம்

கோலாலம்பூர், ஜூன் 11 – நாட்டில் தற்போது ஒரு வகையான சமய குண்டர் கும்பல் கலச்சாரம் அதிகமாகி விட்டதாக பிரபல நடனக் கலைஞரான ரம்லி இப்ராஹிம் வேதனையோடு தெரிவித்துள்ளார். உள்நாட்டு பல்கலைகக்கழக மாணவர்களிடையே உரையாற்றுவற்கு அழைக்கப்பட்ட அவரது நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மனம் நொந்து இப்படியொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகள் மற்றும் உயர்க் கல்வி நிலையங்கள் உட்பட அதிகார வர்க்கத்தினரிடம்கூட இத்தகைய மனப்போக்கிற்கு ஊறியிருப்பதால் அதனை நம்மால் சரிசெய்ய முடியவில்லை. எல்லோருமே சமய குண்டர் கும்பல் கலச்சாரத்தை தொடர்வதால் இனியும் நிலைமையை தடுத்து நிறுத்த முடியாது என ரம்லி இப்ராஹிம் தெரிவித்தார்.

நமது கல்வி முறைவரை புற்றுநோயைப்போல் புரையோடிப் போயிருக்கும் இந்த கலச்சாரத்தை சீரமைப்பதில் பக்காத்தான் ஹரப்பானின் முன்னாள் நிர்வாகம்கூட தோல்வி கண்டு விட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!