புத்ராஜெயா, பிப் 11 – நாட்டில் 80 விழுக்காடு சீனர்கள், பூஸ்டர் தடுப்பூசியை போட்டிருக்கின்றனர். இவ்வேளையில், மலாய்க்காரர்கள் மத்தியில் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களின் விகிதம் 50 விழுக்காட்டிற்கும் கீழ் இருப்பதாக , சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அதையடுத்து, மக்கள் மத்தியில் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை சமூக வலைத்தளங்களில் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, மாநில ரீதியாக , சரவாக் மாநிலத்தில் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். விரைவில் மாநிலத் தேர்தலை சந்திக்கவிருக்கும் ஜோகூரில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இன்னும் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருப்பதாக கைரி குறிப்பிட்டுள்ளார்.